Pages

Wednesday, April 12, 2017

Lenovo G500 Series HDD not detected Problems, லெனோவோ 500 ஹார்ட் டிரைவ் காணவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு லெனோவோ G500 சர்வீசுக்கு வந்தது. ஹார்ட் டிரைவ் டிடக்ட் ஆகவில்லை. வேறொரு ஹார்ட் டிரைவை போட்டால் டிடக்ட் ஆகிறது. புதிய ஹார்ட் டிரைவை மாற்றுவதற்கு முன், பழைய டிரைவை வேறொரு கணினியில் போட்டு பார்த்தால் நன்றாக வேலை செய்கிறது. மதர்போர்ட் ப்ராப்ளமா, பயாஸ் ப்ராப்ளமா என்று செக் செய்தால் எல்லாம் சரியாக இருக்கிறது. புதிய ஹார்ட் டிரைவ் வாங்கிப் போட்டாலும், இதே ப்ராப்ளம் மீண்டும் ஒரு வாரத்துக்குள் வருகிறது என்பது, இன்டர்நெட் பயனார்களின் பதிவுகளில் இருந்து தெரிகிறது. லெனோவோ ஹெல்ப் லைனில் அவர்கள் சொல்லும் ஒரே தீர்வு, பயாஸ் ரீசெட். அது எந்தவித பயனும் அளிப்பதாக தெரியவில்லை.

பல ட்ரயல் அண்ட் எர்ரர்களுக்கு பிறகு, DVD ரைட்டரை கழட்டினால் நன்றாக வேலை செய்கிறது. திரும்பவும் இணைத்தால், ஹார்ட் டிரைவை காணோம் என்கிறது. சில நேரங்களில் ஹார்ட் டிரைவ் கண்டுபிடித்து, பூட் ஆகி உள்ளே செல்வதற்குள் ஹார்ட் டிரைவ் காணாமல் போகிறது. இதற்கு காரணம், SATA connectorகள் அல்லது System Resource sharer ஆகத்தான் இருக்க முடியும். இப்போதைக்கு, DVD drive connected SATA connectorஐ கிளீன் செய்து போட்டால், இரண்டு நாட்களாக நன்றாக வேலை செய்கிறது. திரும்பவும் இந்த ப்ராப்ளம் வந்தால், DVD Driveஐ கழட்டி எறிய வேண்டியது தான் போல.

நம் நண்பர்கள், இதற்கு வேறு ஏதாவது தீர்வு இருந்தால் தெரிவிக்கவும்.

DVD டிரைவ் பிரித்தெடுக்க :

பேட்டரியை வெளியே எடுக்கவும். 
பேட்டரி லாக்கின் கீழ் உல் பக்கத்தில் இரண்டு ஸ்க்ருக்கள் இருக்கும். அதனை கழட்டவும்.
கீழ் பக்கத்தை சிறிது அழுத்தினாற் போல் முன் பக்கம் தள்ளவும்.
dvd டிரைவ் படம் போட்டுள்ள, ஸ்க்ருவை கழட்டவும்.
அந்த ஸ்க்ரூ அருகில்உ ள்ள பகுதியை, வெளியே தள்ளவும்.
DVD ரைட்டர் வெளியே வந்து விடும்.



கடைசியாக, ஞாபகமாக, சர்வீஸ் சார்ஜ் வாங்கிக் கொள்ளவும். அதில் ஒரு 10%ஐ தனியாக எடுத்து வைத்து சேர்த்து வரவும். வருட முடிவில் அந்த பணத்தை அப்படியே Confed Releif Fund"இற்கு அனுப்பி விடவும்.