Pages

Wednesday, April 12, 2017

Lenovo G500 Series HDD not detected Problems, லெனோவோ 500 ஹார்ட் டிரைவ் காணவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு லெனோவோ G500 சர்வீசுக்கு வந்தது. ஹார்ட் டிரைவ் டிடக்ட் ஆகவில்லை. வேறொரு ஹார்ட் டிரைவை போட்டால் டிடக்ட் ஆகிறது. புதிய ஹார்ட் டிரைவை மாற்றுவதற்கு முன், பழைய டிரைவை வேறொரு கணினியில் போட்டு பார்த்தால் நன்றாக வேலை செய்கிறது. மதர்போர்ட் ப்ராப்ளமா, பயாஸ் ப்ராப்ளமா என்று செக் செய்தால் எல்லாம் சரியாக இருக்கிறது. புதிய ஹார்ட் டிரைவ் வாங்கிப் போட்டாலும், இதே ப்ராப்ளம் மீண்டும் ஒரு வாரத்துக்குள் வருகிறது என்பது, இன்டர்நெட் பயனார்களின் பதிவுகளில் இருந்து தெரிகிறது. லெனோவோ ஹெல்ப் லைனில் அவர்கள் சொல்லும் ஒரே தீர்வு, பயாஸ் ரீசெட். அது எந்தவித பயனும் அளிப்பதாக தெரியவில்லை.

பல ட்ரயல் அண்ட் எர்ரர்களுக்கு பிறகு, DVD ரைட்டரை கழட்டினால் நன்றாக வேலை செய்கிறது. திரும்பவும் இணைத்தால், ஹார்ட் டிரைவை காணோம் என்கிறது. சில நேரங்களில் ஹார்ட் டிரைவ் கண்டுபிடித்து, பூட் ஆகி உள்ளே செல்வதற்குள் ஹார்ட் டிரைவ் காணாமல் போகிறது. இதற்கு காரணம், SATA connectorகள் அல்லது System Resource sharer ஆகத்தான் இருக்க முடியும். இப்போதைக்கு, DVD drive connected SATA connectorஐ கிளீன் செய்து போட்டால், இரண்டு நாட்களாக நன்றாக வேலை செய்கிறது. திரும்பவும் இந்த ப்ராப்ளம் வந்தால், DVD Driveஐ கழட்டி எறிய வேண்டியது தான் போல.

நம் நண்பர்கள், இதற்கு வேறு ஏதாவது தீர்வு இருந்தால் தெரிவிக்கவும்.

DVD டிரைவ் பிரித்தெடுக்க :

பேட்டரியை வெளியே எடுக்கவும். 
பேட்டரி லாக்கின் கீழ் உல் பக்கத்தில் இரண்டு ஸ்க்ருக்கள் இருக்கும். அதனை கழட்டவும்.
கீழ் பக்கத்தை சிறிது அழுத்தினாற் போல் முன் பக்கம் தள்ளவும்.
dvd டிரைவ் படம் போட்டுள்ள, ஸ்க்ருவை கழட்டவும்.
அந்த ஸ்க்ரூ அருகில்உ ள்ள பகுதியை, வெளியே தள்ளவும்.
DVD ரைட்டர் வெளியே வந்து விடும்.



கடைசியாக, ஞாபகமாக, சர்வீஸ் சார்ஜ் வாங்கிக் கொள்ளவும். அதில் ஒரு 10%ஐ தனியாக எடுத்து வைத்து சேர்த்து வரவும். வருட முடிவில் அந்த பணத்தை அப்படியே Confed Releif Fund"இற்கு அனுப்பி விடவும்.

Monday, April 11, 2016

Windows 10 - Wifi Problems

நீண்ட நாட்களுக்கு பிறகு, மீண்டும் கணினி சார்ந்த பிரட்சினைகளுக்கு தீர்வு எழுத ஆரம்பிக்கிறேன்.

Windows 10 உபயோகபடுத்துபவர்கள் சிலருக்கு, wifi அல்லது ethernet தொடர்புகள் அடிக்கடி நின்று போகிறது. windows 10 upgrade செய்த என் வாடிக்கையாளர்கள் பலர் இந்தப் பிரட்சினைகளை சந்தித்து, வெறுத்துப் போய் மீண்டும் windows 8 அல்லது windows 7க்கே திரும்பி விட்டனர். இது எதனால் ஏற்படுகிறது என்று சிறு ஆராய்ச்சி செய்த பின் கண்டுபிடித்தது.

முதலில் wifi பட்டன் ஆன் செய்து உள்ளீர்களா என்று சரிப் பார்த்துக் கொள்ளவும்.

அடுத்து, wifi adapter enable செய்து உள்ளதா என சரிப் பார்க்கவும். Control Panel -> Network and Sharing Centre -> Change Adapter Settings (on top left corner). உங்கள் adapter disable செய்யப்பட்டிருந்தால் கிரே கலரில் இருக்கும். ரைட் கிளிக் செய்து "enable" செய்யவும்.

அடுத்து wifi service enable ஆகி உள்ளதா எனப் பார்க்கவும். File Explorer - > This PC (right click) ->Manage -> in Application window select Service and Applications -> Services -> WLAN AUTO CONFIG (double click) -> in general tab change startup type to Automatic. 




உங்கள் கணினியை restart செய்யவும்.
விண்டோஸ் 10 அப்க்ரேட் செய்யப்படும்போது, பழைய விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 -இன் டிரைவர்களையே விண்டோஸ் 10-உம் எடுத்துக் கொள்கிறது. உங்கள் wifi மற்றும் ஈதெர்நெட் களுக்கான டிரைவர்களை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யுங்கள். விண்டோஸ் 10இல் உள்ள "Driver Upgrade" ஆப்ஷனை உபயோகிக்க வேண்டாம். அப்படியும் வேலை செய்யவில்லையா? Driver-ஐ rollback செய்யுங்கள்.


அப்பொழுதும் உங்கள் இணைய தொடர்பு அடிக்கடி விட்டுப் போனால், கீழ்வரும் செட்டிங்கை மாற்றவும்.
Control Panel
Network and Internet
Network and Sharing Centre
Change adapter settings
Wifi (Double click)
Properties
Configure
Power Management
Uncheck "Allow the computer to turn off this device to save power" 
OK

Wifi network listஇல் எதையுமே காண்பிக்கவில்லை என்றால், நீங்கள்   ஏதாவது VPN Software-ஐ உங்கள் பழைய விண்டோஸில் உபயோகப்படுத்தி இருந்தால், இப்போதும் இந்தப் பிரச்சினை தொடரும். முதலில் உங்கள் பழைய VPN Softwareஐ uninstall செய்யுங்கள். ஆனால் நீங்கள் CISCO VPN Client அல்லது Sonic Wall Global VPN போன்ற சாப்ட்வேர்களை பழைய விண்டோஸில் உபயோகப்படுத்தி இருந்தால், அவற்றை uninstall செய்த பின் விண்டோஸ் 10க்கு upgrade செய்யுங்கள். விண்டோஸ் 10 பதிந்த பின் uninstall செய்ய முடிய வில்லை என்றால் கீழ்காணும் வேலையை செய்யவும்.
Start Menu
Command Prompt (Admin) (- Admin மிகவும் முக்கியம்.)
command prompt-இல் 

reg delete HKCR\CLSID\{988248f3-a1ad-49bf-9170-676cbbc36ba3} /va /f
netcfg -v -u dni_dne
exit

கணினியை restart  செய்யுங்கள்.
மீண்டும் "available networks" லிஸ்டில் அனைத்து wifiகளும் வருகிறதா என்று சரிப் பார்த்துக் கொள்ளவும்.


அப்படியும் சரி ஆகவில்லையா? Network Trouble shooter-ஐ ஓட்டி பாருங்கள். அப்போதும் வரவில்லையா? கீழ்கண்ட commandகளை கொடுங்கள்.

Start
command prompt (Admin)
netsh winsock reset     <--- reset="" span="" stack="" tcp="" to="">
netsh int ip reset         <--- address="" ip="" reset="" span="" to="">
ipconfig /renew           <--- address="" ip="" renew="" span="" the="" to="">
ipconfig /flushdns       <--- and="" cache="" client="" dns="" flush="" reset="" resolver="" span="" to="">

இப்போதாவது சரி ஆச்சா? இன்னும் இல்லையா? firewall disable பண்ணுங்க.
netsh advfirewall set allprofiles state off  <--- command="" disable="" dmin="" firewall.="" in="" it="" prompt="" span="" the="" to="" type="">

firewall disable பண்ண பின் உங்கள் wifi வேலை செய்தால், மீண்டும் firewaal enable பண்ணி, உங்கள் wifi பிரச்சினை செய்யாமல் இருக்க கீழ்கண்டதை செய்யுங்கள்.
windows firewall -> Advanced Settings -> Inbound Rules -> Core Networking சென்று உங்களின் அனைத்து networkகளையும் enable செய்யுங்கள். ஆனால் Dial protocol server (HTTP-IN) மற்றும் iSCSI Service மட்டும் disable செய்யுங்கள். அதே ஸ்க்ரீனில் கீழே சென்று, Network Discovery என்பதில் to all public and private என்பதை YES எனவும் domain என்பதை NO எனவும் தரவும்.Wifi Direct Network Discovery, Scan Service use,  spooler use என்பவைகளை YES என செட் செய்யவும்.

Anti-virus, முக்கியமாக Anti-Malware  disable பண்ணுங்க.
Search boxல System and Security-ன்னு டைப் பண்ணி "Review your computer's status and resolve issue"வை செலக்ட் பண்ணுங்க.

Security-இன் கீழ் உள்ள anti-Virus, Spyware and unwanted Software Protection என்பதின் அருகில் உள்ள பட்டனை Off பண்ணுங்க.

சிஸ்டத்தை ரீஸ்டார்ட் பண்ணுங்க. பிரட்ச்சினை தொடுருதா? driverஐ uninstall பண்ணுங்க.

எச்சரிக்கை : 

இது கடைசி பிரம்மாஸ்திரம். இதை மேற்க்கண்ட எல்லாவற்றையும் செய்து விட்டு எதிலும் சரியாகவில்லை என்றால் மட்டுமே செய்ய வேண்டும். இது தானாகவே  உங்களின் அனைத்து network adapterகளின் டிரைவர்களையும் அழித்து விட்டு நீங்கள் ரீபூட் செய்யும்போது புது டிரைவர்களை default செட்டிங்கில் இன்ஸ்டால் செய்யும். உங்களின் விண்டோஸ் 10 ver 1511இல் மட்டுமே இந்த command வேலை செய்யும். உங்களுடைய VPN softwareகள் எதுவும், இதன்பின் வேலை செய்யாது. மீண்டும் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழக்கம்போல start - > run as Admin
netcfg -d

netcfg -d command கொடுக்கும் போது ஏதாவது error வந்தால், "success" வரும்வரை மீண்டும் மீண்டும் கொடுக்கவும்.

கடைசியாக, ஞாபகமாக, சர்வீஸ் சார்ஜ் வாங்கிக் கொள்ளவும். அதில் ஒரு 10%ஐ தனியாக எடுத்து வைத்து சேர்த்து வரவும். வருட முடிவில் அந்த பணத்தை அப்படியே Confed Releif Fund"இற்கு அனுப்பி விடவும்.


Monday, October 31, 2011

new stat file 155 as on OCT 25

Please press the above title to go to new stat file 155

Sunday, August 7, 2011

New stat 148

Hi all!


Here below is the link to new tally 148
http://avmcomputers.blogspot.com/2011/08/latest-stat-file-148-as-on-182011.html

Wait and See

Hi all!


Today I'm going to sworn in as a President of Tiruvannamalai Information Technology Association, to be joined with Confederation of Information Technology Association, Tamil Nadu. So, I have got an opportunity to deal with more after sales service problems of our district customers. Let us see, what the companies are going to do and what is their mood.